பதிவு செய்த நாள்
04
செப்
2015
12:09
அன்னுார்: - ஒன்னக்கரசம் பாளையம், செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 6ம் தேதி நடக்கிறது. காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, ஒன்னக்கரசம் பாளையத்தில், பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 5ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இரவு யாகசாலை பூஜை, சுவாமிக்கு மருந்து சாத்துதல் நடக்கிறது. 6ம் தேதி அதிகாலையில் வேதிகார்ச்சனை, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள் ஆலயத்தை வலம் வருதல் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, விமானத்திற்கும், 7:30 மணிக்கு, செல்வ விநாயகருக்கும், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.