பதிவு செய்த நாள்
04
செப்
2015
12:09
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை சாய்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு சுப்ரபாரதம் நிகழ்ச்சியும், காலை, 8:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை மூலவருக்கு பாலபிஷேகமும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதிகளை சேர்ந்த 1,000திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.