இளையான்குடி : கலைக்குளத்தில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இரவு 8 மணிக்கு வைகை நாயகி அம்மன் ஊரணியில் இருந்து பெண்கள் புனித நீர் எடுத்து வந்தனர். இரவு 9மணிக்கு பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரியை அம்மன் மேடையில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் 12 மணிக்கு பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச்சென்று கண்மாயில் கரைத்தனர்.