நோயாளிகளை அவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நலம் விசாரிக்கச் சொல்லும் நபிகள் நாயகம், ஒரே ஒரு வகையினரை மட்டும் நலம் விசாரிக்க செல்லக்கூடாது என்கிறார்.அது, மது அருந்துபவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள், என்பதாகும்.ஆம்... குடியை நபிகள் நாயகம் கடுமையாக எதிர்க்கிறார். ஏதோ, சில காரணங்களால் வரும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் பரிதாபத்திற்குஉரியவர்கள். இவர்களை நலம் விசாரிப்பதன் மூலம் அவர்கள் ஆறுதலடைவர். ஆனால், குடிகாரன் தனக்கு நோய் வருமென தெரிந்தே தவறுசெய்கிறான். தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பு கிடையாது. நோய் வரும் என்று தெரிந்தும், ஒரு பானத்தை அருந்துபவனின் முகத்தில் கூட விழிக்கக்கூடாது என்பது இஸ்லாமின் கொள்கை. குடிக்கு முழுக்கு போடுங்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நல்ல பெயர் எடுங்கள்.