திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2015 10:09
காரைக்கால்: ஆபரேஷன் ஆம்லாவையொட்டி காரைக்காலில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து கடலோர பகுதிகளிலும் நேற்று 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையம், பஸ் நிலையம், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் இன்ஸ்பெக்டர் பால் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் கோவிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.