சேதுக்கரையில் மண்ணில் புதைந்து கிடந்த சுவாமி சிலைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2015 12:09
கீழக்கரை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ.க., இளைஞர் அணி சார்பில் சேதுக்கரை கடலோர பகுதிகளில் தூய்மை பணி நடந்தது. ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுரைவீரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்னேஷ்வரன், ஒன்றிய தலைவர் வாசசேகர் மற்றும் சங்கர், ரமேஷ், கணேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மகேஸ்வரன் நன்றி கூறினார். இதில் மண்ணில் புதைந்து கிடந்த 50 க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை கண்டெடுக்கப்பட்டது.