பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
சென்னிமலை: சென்னிமலை அடுத்த பனியம்பள்ளி பஞ்., தொட்டப்பட்டி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 17ம் தேதி காலை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, சென்னிமலை டவுன் பிராட்டியம்மன் கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், மாடு, யானை, குதிரை முன் செல்ல மேள தாளம் முழுங்க நடந்தது. நான்கு ரத வீதிகளில் உலா வந்து, தொட்டப்பட்டி மாகாளியம்மன் கோவிலுக்கு, 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். கும்பாபிஷேக பூஜைகள் இன்று காலை, 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து மாலை, 5 மணிக்கு முதற்காலயாக பூஜை துவங்கிறது. 17ம் தேதி காலை, 9 மணிக்கு 4ம் காலயாக பூஜைகளும், தொடர்ந்து, 10 மணிக்கு மேல் விமானம், வினாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. பகல், 12 மணிக்கு மஹா அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல், 17ம் தேதி வரை மூன்று நாட்கள் அன்னதானம் நடக்கிறது.