சீனாவில் யந்திர வடிவிலும், சிலை வடிவிலும் விநாயகரை வழிபடுகின்றனர். இவரை குவன்ஹீடியிக் என அழைப்பர். விநாயகர் கோவில் அமைந்துள்ள கோட்டான் என்ற ஊரில் இறுக்கமான முழங்கால் அளவுள்ள கருப்பு நிற பர்முடாஸ் போன்ற கால் சட்டையும், உடலுக்கு புலித்தோலும் அணிவித்துள்ளனர். முத்துமாலை தோள்வளையம், கிரீடம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். சுவரில் சாய்ந்து இருப்பது போலவும் விநாயகர் சிலைகள் வடிக்கப்படுகின்றன. கி.பி.513ல் வடிக்கப்பட்ட மிகப் பழமையான விநாயகர் உருவம் டூங்கூரங் என்ற ஊரிலுள்ள கோவிலில் உள்ளது.