சிதம்பரம்: நடராஜர் சுவாமி தரிசனத்திற்கு வருகை தந்த சிண்டிகேட் வங்கி செயல் இயக்குனர் குடிநீர் குளிரூட்டும் இயந்திரத்தை இலவசமாக வழங்கினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிண்டிகேட் வங்கி செயல் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா வருகை தந்தார். சிதம்பரம் வங்கி கிளை மேலாளர் மோகன்ராஜ் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்றனர். பின்னர் கனகசபையில் இருந்து நடராஜர் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பொதுதீட்சிதர்கள் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சிண்டிகேட் வங்கி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குளிரூட்டும் இயந்திரத்தை (வாட்டர் கூலர்) பொது தீட்சிதர்கள் செயலர் சர்வேஸ்வர தீட்சிதரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பிராந்திய மேலாளர் தேவராஜ், முதுநிலை மேலாளர் லோகசாமி, சிதம்பரம் கிளை மேலாளர் மோகன்ராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.