கிள்ளை: கிள்ளை தைக்கால் மகாமாரியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிதம்பரம் தாலுகா கிள்ளை தைக்காலில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தீ மிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 14ம் தேதி மாலை கரம், காவடி புறப்பாடு குளக்கரையில் துவங்கி கோவிலை சென்றடைந்தது. மாலையில் நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.