சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் கச்சிராயிருப்பில் வடக்கத்தி செல்லியம்மன், மாரியம்மன் கோயில்களில் புரட்டாசி உற்சவம் நடந்தது. பக்தர்கள் வைகை ஆற்றில் புனிதநீர் குடங்களுடன் சென்று, அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். மாலை அக்கினிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் நெய் மாவிளக்கேற்றி, முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். குருவித்துறை நல்லதங்காள் அம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம் நேற்று துவங்கியது. பெண்கள் மஞ்சள் நீராடி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.