பதிவு செய்த நாள்
01
அக்
2015
12:10
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தது. திருச்சி, மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோவில்களில், கடந்த மாதம், 17ம் தேதி, 150 எடையில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை படையலுடன், விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. தொடர்ந்து, 12 நாட்களும், உபயதாரர்கள் சார்பில், உற்சவ விநாயகருக்கு அபிஷேகம் செய்து, பால கணபதி, குமார கணபதி, ராஜ கணபதி என, 12 விதமான அலங்காரங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம், 25 வகையான திரவியங்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. நேற்று காலை, 11 மணிக்கு, திருக்கோவில் பணியாளர்கள் சார்பில், உற்சவ விநாயகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.