Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரொம்ப எளிய வழிதான்! ஆனால்... ... திருப்பதிக்கு வலுக்கட்டாயமாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பட்டிமன்றத்தில் பேச வேண்டுமா பாடுங்க...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2015
12:10

குழந்தை இல்லையே என வருந்துகிறீர்களா? பட்டிமன்றம், கருத்தரங்கம் முதலியவற்றில் பேசுபவர்களைக் கண்டு நாமும் இப்படி வல்லமையுடன் பேச வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? இவரைப் போல் எழுத முடியவில்லையே என வருந்தியிருக்கிறீர்களா! ஆன்மிகத்தில் உயரப் பறக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா! நீங்கள் அத்தனை பேரும் திருவெண்காடு(சீர்காழி அருகிலுள்ள நவக்கிரக புதன் ஸ்தலம்) சுவேதாரண்யேசுவரர், பிரம்மவித்யா நாயகியை மனதில் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. ஞானசம்பந்தர் இதை அருளியுள்ளார்.

கண் காட்டும் நுதலானும், கனல்
காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும்,
பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்
காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும், விடை
காட்டும் கொடியானே.

பேய் அடையா, பிரிவு எய்தும்;
பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம்பெறுவர்; ஐயுற
வேண்டா ஒன்றும்;
வேயனதோள் உமை பங்கன்
வெண்காட்டு முக்குள நீர்,
தோய்வினையார் அவர் தம்மைத்
தோயாவாம், தீவினையே.

மண்ணொடு நீர், அனல், காலோடு
ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இக
பரமும், எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு
சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட, வெண்காடு
இடமா விரும்பினனே.

விடம் உண்ட மிடற்று அண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
குருகு என்று
தடம் மண்டு துறைக்கெண்டை,
தாமரையின் பூமறையக்
கடல் விண்ட கதிர் முத்தம் நகை
காட்டும் காட்சியதே.

வேலை மலி தண்கானல் வெண்
காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண்சாந்தால் வழிபடு
நல் மறையவன்தன்
மேல் அடர்வெங்காலன் உயிர் விண்ட
பினை, நமன் துõதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று,
அடர அஞ்சுவரே.

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்,
சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்
கூறுஉகந்தான்; உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல
ஓதப், பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல்
வீற்றிருக்கும் வெண்காடே.

 சக்கரம் மாற்கு ஈந்தானும்,
சலந்தரனைப் பிளந்தானும்,
அக்கு அரைமேல் அசைத்தானும்
அடைந்துஅயிராவதம் பணிய
மிக்க அதனுக்கு அருள் சுரக்கும்
வெண்காடும் வினைதுரத்தும்
முக்குளம் நன்கு உடையானும்,
முக்கண் உடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள்,
பயம்எய்த மலைஎடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று
அருள்செய்தான் உறைகோயில்,
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடம்ஆடக், கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு
இசைமுரலும் வெண்காடே.

கள்ஆர்செங் கமலத்தான்
கடல்கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து
ஆழ்ந்தும், உணர்வு அரியான்;
வெண் ஆனை தவம் செய்யும் மேதகு
வெண்காட்டான் என்று
உள்ஆடி உருகாதார்
உணர்வு உடைமை, உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
மொழிபொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்;
அறிவுடையீர், இதுகேள்மின்;
வேதியர்கள் விரும்பியசீர்
வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர்
என்று உணருமினே.

 தண் பொழில் சூழ் சண்பையர் கோன்,
தமிழ்ஞான சம்பந்தன்,
விண் பொலி வெண் பிறச் சென்னி
விகிர்தன்உறை வெண்காட்டைப்
பண் பொலி செந் தமிழ் மாலை
பாடியபத்து இவை வல்லார்,
மண்பொலிய வாழ்ந்தவர், போய்
வான்பொலியப் புகுவாரே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar