Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை ... எப்போதும் நல்லவனாயிரு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லா உயிரும் சமமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2015
04:10

ஆண்டவருக்கு  மனிதன் என்ற பெரிய உயிர், பிராணி என்ற சிறிய உயிர் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. அவர்  எல்லாவற்றின் மீதும் மிகுந்த கருணை கொள்கிறார். ஒரு சுண்டெலியின் அளவுள்ள ப்போசும் என்ற சிறிய பிராணி வடஅமெரிக்காவில் இருக்கிறது. இது சிறிய பிராணியாக இருந்தாலும், இதில் அநேக விசேஷத்தன்மைகள் காணப்படுகின்றன. இந்த பிராணியின் பெண் இனத்திற்கு, கங்காரு போன்று வயிற்றில் பை உள்ளது. பிறக்கும் குட்டிகளை, இரண்டு மாதம் வரை அந்தப் பையில் வைத்தே பால் கொடுத்து பராமரிக்கிறது. அதன்பின், சில மாதங்களுக்கு குட்டிகளை முதுகில் ஏற்றிக்கொண்டு செல்கிறது. அந்த குட்டிகள், நம் ஊர் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் பயணிகள் போல, தாயின் உடலில் தொற்றிச் செல்கிறது. பழவகை, கொட்டைகள், தவளை, பூச்சிகளை தானாகவே தின்னும் காலம் வரும் வரை தாயுடன் இருக்கிறது. பின், இரவுப்பொழுதுகளில் மட்டும் தானாகவே மேய ஆரம்பிக்கிறது. இவற்றை நரி, ஓநாய், காட்டுப்பூனை போன்றவை வேட்டையாட வருகின்றன. அவை விரட்டும் போது, இவை வேகமாக ஓடி தப்ப முயற்சிக்கிறது. முடியாத பட்சத்தில், சுருண்டு விழுந்து, இறந்தது போல் நடிக்கிறது. அது  மட்டுமல்ல! தான் உடலிலிருந்து, செத்த விலங்குகளின் உடலிலிருந்து வரும் நாற்றத்தைப் போல் துர்நாற்றமடிக்கச் செய்கிறது.  அவற்றை முகர்ந்து பார்க்கும் மிருகங்கள், அந்த துர்நாற்றத்தைச் சகிக்காமல் வேறு பக்கம் போய் விடுகிறது. நான்கு மணி நேரம் வரை இப்படியே கிடக்கின்றன அந்த சிறிய பிராணிகள். இனி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகு அங்கிருந்து ஓடிவிடும். பாருங்களேன்! ஒரு சிறிய பிராணிக்கு தேவன் கொடுத்திருக்கும் அறிவை! ஆக, தேவன் இந்த சிறிய பிராணியையும் நேசித்து, அதற்கு கொடுத்திருக்கும் அறிவைப் பாருங்கள். அவர் மனுக்குலத்திற்கும் (மனித குலம்) நித்திய மரணத்திற்கு அல்லது நரகத்திற்கு தப்புவிக்கும் மார்க்கத்தையும் அறிவையும் தந்திருக்கிறார். நாம் என்ன செய்திருக்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். இப்போது சொல்லுங்கள்...ஆண்டவரின்  கருணைக்கு மனிதன் போன்ற பெரியவன்,  ப்போசும் போன்ற சிறிய பிராணி என வித்தியாசமில்லை. ஆம்...அவரின் கருணைக்கு சிறிது பெரிது என்ற அளவும் இல்லை. தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar