சிவன்கோயில்களில் அவருக்கு எதிரேதான் நந்தீஸ்வரர் இருப்பார். அவருக்கென தனிக்கோயில் எதுவும் கிடையாது. ஆனால் நந்தீஸ்வரருக்கு ஒரே ஊரில் ஒன்பது கோயில்கள் இருக்கிறது என்றால் சாதாரண விஷயமா? ஆந்திர மாநிலம் நந்தியால் தலத்தில் சிவநந்தி, பிரம்மநந்தி, விஷ்ணுநந்தி, விநாயகநந்தி, பத்மநந்தி, சூரிய நந்தி, சோமநந்தி கருடநந்தி, நாக நந்தி என ஒன்பது நந்திகளுக்கும் தனித் தனி கோயில்கள் இருக்கின்றன.