வேலுார் : கத்தாரி குப்பம் சிவன் கோவிலில், 108 துறவிகள் வழிபாடு செய்தனர். ராணிப்பேட்டை அடுத்த கத்தாரி குப்பத்தில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு காஞ்சி காமகோடி பீடத்தின், 13வது பீடாதிபதி சத் சித் கணேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜீவ சமாதி உள்ளது.ரிஷிகேஷ் சங்கரமடத்தைச் சேர்ந்த, 108 துறவிகள், நேற்று முன் தினம் கத்தாரி குப்பம் சிவன் கோவிலுக்கு வந்தனர். கோவில் நிர்வாகி ராஜப்பா, தென்னிந்திய புரோகிதர் சங்க பொதுச் செயலாளர் ஆற்காடு நரசிம்ம அய்யர் ஆகியோர் வரவேற்றனர்.நேற்று அவர்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர், 13வது பீடாதிபதியின் பிருந்தாவனத்தை தரிசித்தனர். பின் துறவிகளுக்கு மலர்களால் பாத பூஜை செய்து, பொதுமக்கள் ஆசி பெற்றனர். சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.