ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2015 10:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா இன்று (அக்., 12) துவங்குகிறது. இதையொட்டி இன்று காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அக்., 21 வரை தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடக்கின்றன. விஜயதசமி நாளான அக்.22 ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றிரவு 7 மணிக்கு மகிஷாசுர மர்த்தினி கோலத்தில் அம்பாள் புறப்பாடு நடக்கும்.