பதிவு செய்த நாள்
12
அக்
2015
10:10
கரூர் : சென்னை நிருத்யோ பாசனா, கரூர் தான்தோன்றி பெருமாள் சேவா அறக்கட்டளை மற்றும் நாரத கான சபா சார்பில், தான்தோன்றி பெருமாள் வைபவம் என்ற நாட்டிய நாடகம் கரூரில் நடந்தது.திருவேங்கிடமலையில் பெருமாள் ஓய்வில் இருந்த போது, அவரை பார்க்க அனுமதிக்காத ஆதிசேசனுக்கும், வாயு தேவனுக்கும் ஏற்பட்ட மோதலில், திருவேங்கிடமலை சிதறிய காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை, டாக்டர் ருக்மணி ரமணி எழுதிய, தான்தோன்றி பெருமாள் வைபவம் என்ற நாட்டிய நாடகத்தை, சிவகலாலயா நாட்டிய பள்ளியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கரூர் நாரத கானா சபாவில் நடத்தினர்.தொடர்ந்து, தமிழக அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் ஸ்ரீதர், தாந்தோன்றி பெருமாள் குறித்த சுப்ரபாத கேசட்டை வெளியிட்டார். அப்போது, நாரத கான சபா பொருளாளர் வித்யாசாகர், டாக்டர் ருக்மணி ரமணி, நிருத்யோ பாசனா நிறுவனர் ேஹமராஜன், தலைமை நிர்வாகி ராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.