திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2015 10:10
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியிலுள்ள சிவன் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை வழிபட்டனர். இதேப்போல், மாரங்கியூர் ராமலிங்கேஸ்வரர், தென்மங்கலம் சீதப்பட்டீஸ்வரர், ஏமப்பூர் வேதபுரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ஆமூர் மரகதாம்பிகை சமேத மார்க்கசகாயஈஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஆத்ம லிங்கேஸ்வரர் அறக்கட்டளை சார்பில் 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.