பதிவு செய்த நாள்
13
அக்
2015
01:10
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக பெருவிழாவுடன் தொடர்புடைய, 12 சைவ கோவில்களில் ஒன்றான,காளஹஸ்தீஸ்வரர் கோவில், ராகு, கேது பரிகார தலமாக திகழ்கிறது.
மகாமகத்தை ஒட்டி, இக்கோவிலில், 28 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அறநிலையத் துறை, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியது; இளைஞர்
பஜனை சமாஜ உறுப்பினர்கள், 13 லட்சம் வழங்கினர்.திருப்பணி முடிந்து, 26-ம் தேதி காலை, 9.40
மணிக்கு மேல், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது; 24ல் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.