பதிவு செய்த நாள்
13
அக்
2015
02:10
திருப்பூர்: குமார் நகர் (கிழக்கு) விநாயகர், ராஜராஜேஸ்வரி, முத்து கருமாரியம்மன் கோவிலில், மகா சண்டி யாகம், இன்று துவங்கி, வரும், 22 வரை நடைபெறுகிறது.
இன்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது; 20 வரை, தினமும், 7:30 மணிக்கு, மகா சண்டி ஹோமம் நடைபெறும். பகல், 12:00க்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்படும். மாலை, 6:00க்கு, திருவிளக்கு பூஜை. நவதுர்க்கா ஹோமம் நடைபெறும். இரவு, 10:00க்கு, 64 பைரவர், 64 யோகினி பலிதானம் நடத்தப்படும்.
அக்., 21 காலை, 7:00க்கு, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.
பகல், 11:00க்கு, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகா தீபாராதனை நடைபெறும். இரவு, 7:00க்கு, நவதுர்க்கா பூஜையை தொடர்ந்து, சொற்பொழிவு நடைபெறும். அக்., 22 விஜயதசமியன்று, காலை, 9:00க்கு, பிராயச்சித்த ஹோமம், நண்பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும். சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சொற்பொழிவுடன் விழா நிறைவடையும்.
மகா சண்டிஹோமத்தை, மயிலாடுதுறை சிவபுரம் சிவவேதாகம பாடசாலை முதல்வர்
சுவாமிநாத சிவாச்சாரியார், திருமுருகன்பூண்டி முத்து சிவசுப்ரமணிய சிவாச்சாரியார், திருப்பூர் சிவஸ்ரீ சிவாச்சாரியார் நடத்துகின்றனர். ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர், 99760 11149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.