சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், நெய், பன்னீர், பஞ்சாமிர்தம் சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. சித்தர், வராஹிஅம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை நடந்தது. மு.சூரக்குடி கோயில்பட்டி செகுட்டு அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.