திருப்புவனம்: திருப்புவனம் வைகையாற்றில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகியம்மன் கோயில். காசியை விட வீசம் கூடுதல் என போற்றப்படும் இத்திருத்தலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியம். ராமேஸ்வரத்தை விட திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். நேற்று புரட்டாசி மகளாய அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.