பதிவு செய்த நாள்
22
அக்
2015
11:10
கோவை: கோவை ராம்நகரில், ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கொலு வைக்கப்பட்டிருந்தது. கொலுவில், பாபா கோவிலின் தோற்றம், கேட்பவருக்கு கேட்டதை அள்ளித்தரும் இடமான துவாரகாமாயி, பலரின் குறைகளுக்கு, துன்பங்களுக்கு விடையளிக்கும் அவரது சாவடி, பாபா தங்கியிருந்த மசூதி உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கிருஷ்ணனின் அனைத்து லீலைகள், லட்சுமி, குபேரன் செட், ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனி, துளசிமாடம் செட், வைகுண்டம் செட், பிரதோஷம் செட் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.