Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் ... ராமநாதசுவாமி கோயில் அன்ன வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகாதாரக்கேடாய் மேலூர் சிவன் கோயில் சுற்றுப்புறம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2011
12:07

மேலூர் : மேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலின் சுற்றுப்புறம் சுகாதாரக்கேடாய் உள்ளது, இதை நகராட்சியும் தூய்மைப்படுத்தவில்லை, அறநிலையத்துறையும் கண்டுகொள்ளவில்லை. மேலூர் நகர் மற்றும் கிராம புற மக்களின் திருமணங்கள் மேலூரில் உள்ள சிவன் கோயிலில் நடைபெறும். தனியாக திருமணத்திற்கு மண்டபம் பிடித்திருப்பவர்கள் கூட, தாலி கட்டும் வைபவத்தை இக் கோயிலில் நடத்திவிட்டு மற்ற நிகழ்ச்சிக்களுக்கு மண்டபம் செல்வர். ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் இக்கோயிலில், முகூர்த்த நேரங்களில் ஒரே நாளில் 20க்கு மேற்பட்ட திருமணங்கள் கூட நடைபெறும். இக்கோயிலின் சுற்றுப்புறம் மிகவும் சுகாதார கேடாய் உள்ளது. கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் காம்பவுண்ட் சுவரை ஒட்டி குப்பைகள் கொட்டப்படுவதும், சிறுநீர் கழிப்பதுமாக உள்ளனர். இங்கு தேங்கி உள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச் சுவரை ஒட்டி நகராட்சியின் குப்பை வண்டிகள் ஓய்வுக்காக நிறுத்தப்படுகிறது. அத்துடன் கோயில் சுவரை ஒட்டியுள்ள தெருவிளக்கின் சுவிட்ச் பாக்ஸ் தரையை தொட்டபடி உள்ளது. இவ்விடத்தில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எதிர்பாராத விதமாக வாகனங்கள் இதில் மோதிவிடவும், சிறுவர்கள் யாரேனும் தொட்டுவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது. அறநிலையத் துறைக்கு வருமானம் வரும் இக் கோயிலின் பராமரிப்பு குறித்து அவர்கள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏனோ?

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar