மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி குண்டம் விழா மிகவும் பிரசித்தமானது. இவ்விழாவின் கொடியேற்றம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதையடுத்து, இன்று குண்டம் இறங்கும் விழா நடந்தது. ஏராளமானோர் பக்தி சிரத்தையுடன் குண்டம் இறங்கினர். இவ்விழாவில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.