சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலை, புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெய்வ உருவங்கள் அகற்றப்பட்டு, புதிதாக செய்யப்பட்டது. அதற்கான பாலாலயம் நிகழ்ச்சிக்கு, நேற்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. காலை, 9.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், விநாயகர், மதுரை வீரன், பொம்மி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலர் உமாதேவி உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல், சேலம் அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதை முன்னிட்டு, நேற்று பாலாலய விழா நடந்தது.