ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பு அவசியம் : சுவாமி சிவயோகானந்தா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 12:10
திருப்பரங்குன்றம்: ஒவ்வொரு மனிதருக்கும் அர்ப்பணிப்பு அவசியம் தேவை என சுவாமி சிவயோகானந்தா பேசினார். மதுரை சின்மயா மிஷன், ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளாச்சேரி முனியாண்டிபுரம் ஐயப்பன் கோயிலில் பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் தமிழில் தொடர் சொற்பொழிவு தினம் மாலை 6.45 முதல் இரவு 8 மணிவரை நடக்கிறது. நேற்று சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: பெரும்பாலான மனிதர்கள் கனவுகளிலேயே வாழ்கின்றனர். விழித்துப் பார்த்தால்தான் உண்மையான வாழ்க்கை புரியும். சந்தோஷத்தை நிராகரிப்பவர்கள் இல்லை. அதே சமயம் துக்கத்தை ஏற்பவர்களும் இல்லை. கர்மம் என்பது பந்தப்படுத்துவதும், பந்தத்திலிருந்து விடுவிப்பதும் ஆகும். கர்மத்தை விடாமல் ஞானத்தை பெற முடியாது. அர்ப்பணிப்புகள் இருந்தால்தான் உயர்ந்த பலனைப் பெற முடியும். குறிப்பாக அகங்காரங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுய நலத்தை விடுத்து கொஞ்சம், கொஞ்சம் பொது நலத்தில் ஈடுபட வேண்டும். எதுவெல்லாம் அழியக்கூடியதோ அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. உடலைப் பற்றி கவலைப்படாதவர்கள் வாழத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் வாழத் தெரியாதவர்கள், வாழ்வை விரையம் செய்கின்றனர் என்று அர்த்தம். என்றார். அக். 30 வரை சொற்பொழிவு நடக்கிறது.