பதிவு செய்த நாள்
27
அக்
2015
12:10
ப.வேலூர்: பாண்டமங்கலம் பழைய காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ப.வேலூர் அடுத்த பாண்டமங்கலத்தில், பழைய காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. புதியதாக கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. அதில், கோவில் கோபுரம் கலசம் வைத்தல், கண்திறப்பு, மருந்து சாத்துதல், தமிழ் திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை மற்றும் இரண்டாம் காலயாக வேள்வி நடந்தது, தொடர்ந்து, இரண்டாம் கால மங்கள மகா பூர்ணாகுதி, யாத்ர தானம், கலசங்கள் புறப்பாடும் அதை தொடர்ந்து, விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பழைய காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் சாந்தி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், வெங்கரையில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.