பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அன்னாபிேஷக விழா நடந்தது. விழாவையொட்டி, ருத்ரலிங்கேஸ்வரருக்கு, 16 வகை திரவிய அபிேஷகம், அன்ன அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. பொள்ளாச்சி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷகம் மற்றும் அபிேஷக ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாலை 3:00 மணிக்கு அமணலிங்கேஸ்வரருக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அபிேஷகம், மாலை 4:30 மணிக்கு அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.
ஜோதி நகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மாலையில், சிவனுக்கு அன்னாபிேஷக அலங்காரம் நடந்தது. இதுபோன்று, பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், தேவம்பாடிவலசு அம்மணீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அன்னாபிேஷகம் நடந்தது.
ஆனைமலை:ஆனைமலை ரமணமுதலி புதூரில் உள்ள மகுடீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லூர் சித்தாண்டி ஈஸ்வரர் கோவில், ஆனைமலை சோமஸ்வரர் கோவிலில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், கனி அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.