மேட்டுப்பாளையம்: வுர்ணமியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவருக்கும், நந்திக்கும் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சங்கத்தினர் செய்திருந்தனர்.