பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோவிலை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையத்தில் பெருமாள் கோவில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும், கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஆனால், இந்த கோவில் முறையான பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. கோவிலை சுற்றியுள்ள சுற்றுச்சுவர், இடிந்த நிலையில் பரிதாபமாக உள்ளது. மேலும், கோவிலின் கதவுகளும் உடைந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே, பழைமையான பெருமாள் கோவிலை, சீரமைக்க அறநிலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.