ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ராம்கோ அறக்கட்டளை, பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் நடத்தும் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவி விடுதியில் நவராத்திரி நடந்தது. முளைப்பாரி ஏற்படுத்தி அம்மன் வழிபாடு நடந்தது. பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விடுதி தாளாளர் சுதர்சனம் தலைமை வகித்தார். பி.ஏ.சி.எம். பள்ளி தாளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். விஷ்ணு சங்கர் மில் சீனியர் பொதுமேலாளர் குருசாமி, பொதுமேலாளர் ரவிராஜா, ராஜபாளையம் மில் மனிதவள மேம்பாட்டு துறை சீனியர் பொதுமேலாளர் நாகராஜ் பலர் கலந்துகொண்டனர்.