புதுச்சேரி கோவில்களில் ஆறு கால பூஜை:உண்ணாவிரதம் இருக்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2015 12:11
புதுச்சேரி: கோவில்களில் தினம் 6 கால பூஜை நடத்த கோரி, திருக் கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், குறிஞ்சி நகர் கிளை செயலாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரியில் உள்ள கோவில்களில் தினசரி கோ தரிசனம் நடக்க வேண்டும். இதற்காக கோ சாலை அமைக்க வேண்டும். கோவில்களில் 6 கால பூஜைகள் நடக்க வேண்டும். வருடத்திற்கு 2 லட்சார்ச்சனைகள் நடத்த வேண்டும். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பிரார்த்தனை விளக்கேற்ற இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.மணக்குள விநாயார் கோவில் வளாகத்தை மேலும் விரிப்படுத்த வலியுறுத்தி வரும் 25ம் தேதி, திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.