பதிவு செய்த நாள்
11
நவ
2015
12:11
காரப்பாக்கம்: காரப்பாக்கம் கோவில் குளத்தில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி,
விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில்
உள்ள குளம், சில ஆண்டுகளுக்கு முன், புனித நீராடல் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக
பயன்பட்டது. அந்த குளத்தில், பகுதிவாசிகள் குளித்தும், சிறுநீர் கழித்தும் அசுத்தமாக்கிவிட்டனர். இதையடுத்து, பகுதிவாசிகளின் கோரிக்கையையடுத்து, மாநகராட்சி சார்பில், 70 லட்சம் ரூபாய் செலவில், கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தை சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி, ஓரிரு மாதங்களில் முடிவடையும்
என்றார்.