பதிவு செய்த நாள்
13
நவ
2015
06:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 18ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் நவ.,18ம் தேதி, நடக்கிறது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல் கட்டமாக, பரமபத வாசல் கோபுரம், வடக்கு வாசல், கிழக்கு வாசல், கட்டை கோபுரம் உள்ளிட்ட, 11 கோபுரங்களுக்கும், சரஸ்வதி, கிருஷ்ணர், வேணுகோபாலன், நம்மாழ்வார், தன்வந்திரி, ஹயக்கிரீவர் உள்ளிட்ட, 43 உப சன்னிதிகளுக்கும், செப்டம்பர், 9ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, மூலஸ்தானம், ராஜகோபுரம், தாயார் சன்னிதி, ரங்கா கோபுரம் உட்பட, 10 கோபுரங்கள்; 15 சன்னிதிகளுக்கு நவ., 18ம் தேதி நடைபெறுகிறது. திருப்பணிகள் முடிந்த நிலையில் ரெங்கநாதர் கோவிலில் கும்பாபிேஷகத்துக்காக, மூலவர் தங்க விமானம் உள்ளிட்ட ஆர்யபட்டாள், கார்த்திகை, ரங்கா, ரங்கா, ராஜகோபுரம் தயார் நிலையில் உள்ளன.