வெளிப்புற தட்பவெப்பநிலை குளுமையாக இருக்கும் காலம் (மழை பனி) என்பதால் தண்ணீரில் குளிப்பதே நல்லது. சிறு உதாரணம் வெயில் அதிகமாக இருக்கும் சமயத்தில் ஐஸ்வாட்டரைக் குடிப்பதை விட வெதுவெதுப்பான வெந்நீரைக் குடித்தால் தாகம் சட்டென்று அடங்கும் உள்ளும் புறமும் ஒரே மாதிரி இருப்பதால் அந்தக் காலகட்டத்தில் பரவக் கூடிய தொற்றுநோய் போன்றவை வராமல் இருக்கும் சபரியாத்திரை செல்ல÷ வண்டுமானால் உடல்நலம் சீராக இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்த விதிமுறை குளிப்பதால் ஏற்படும் குளுமை உடலில் சீராகப் பரவ வேண்டும். என்பதற்காகவே சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.