ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2015 02:11
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் இருக்கிறான். என நம்புவது அனைத்தையும் தெய்வீகம் நிறைந்தவையாகவே பார்ப்பது அடுத்தது, உலகில் இருப்பவை யாவும் கடவுளே என்று எண்ணுவது எல்லாம் கடவுளே என நினைத்து வணங்குவது ஐயப்ப வழிபாட்டில் எல்லோரும் எல்லாமும் ஐயப்பனே என்று ஐதிகம் கடைப்பிடித்தப்படுகிறது அதனால்தான் ஐயப்ப பக்தர்கள் எல்லோரையும் அந்த ஐயப்பனாகவே பாவித்து சாமி என்று அழைக்கிறார்கள் விலங்கு, பறவை போன்றவற்றையும் கூட ஐயப்ப சாமிய õகவே பாவிக்கிறார்கள். அப்படியே கூப்பிடுகிறார்கள். எல்லாம் தெய்வமே என்கிறபோது உயர்ந்தவர் தாழ்ந்தவர் உள்ளவர் அற்றவர் என்பது உள்ளிட்ட எந்த பேதமும் பக்தர்களுக்கு இடையே இருக்காது தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் நிலவும்.