Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருமுடி சுமந்து மலையேறச் சொல்வது ... ஐயப்ப பக்தர்கள் ஏன் வெந்நீரில் குளிக்க கூடாது? ஐயப்ப பக்தர்கள் ஏன் வெந்நீரில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
ஏழு புனித அம்சங்கள் கொண்ட சபரிமலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
12:01

சுயமாக உண்டானது அல்லது இறைவனுடைய ஜோதிர்லிங்கம் விளங்கும் சுயம்புலிங்க பூமி; மகாயாகம் நடந்த யாக பூமி; பக்தி மார்க்க தர்ம யுத்தம் நடந்த பலி பூமி; ரிஷிகள் தவமிருந்த யோக பூமி; யோகியர்கள் வாழ்ந்த தபோ பூமி; தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமி; புனித நதிகள் சங்கமிக்கும் பூமி.

இந்த எழில் ஒன்றிருந்தாலும் அது புனித பூமியாகும் இத்தகைய திருத்தலத்திற்கு யாத்திரை செல்வதாலும், தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் ஒரு ஜீவனின் அனைத்துப் பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை இந்த ஏழு அம்சங்களும் கொண்டு திகழ்கிறது. பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. மேலும், இங்கு ஒவ்வொரு வருடமும் மகாசங்கராந்தி புனித நாளில் ஜோதி உருவாய் பொன்னம் பல மேட்டில் ஸ்ரீஐயப்பன் காட்சி கொடுத்தருளுகிறார். எனவே, இது ஜோதிர்லிங்க சுயம்புவாகப் போற்றப்படுகிறது.

இங்கு ஓடும் பம்பை நதிக்கரையில் முனிவர்கள் குடில்கள் அமைத்து தினமும் யாகம் செய்திருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதைக் காணலாம். ரம்பாசுரனின் மகனாகப் பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, நான்முகனான பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்று. அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான் தேவர்கள் பராசக்தியை வேண்ட பராசக்தியானவள் மகிஷனிடம் போர்புரிந்து அவளை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது. இது ரிஷிகள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும், புனித நதிகள் சங்கமிக்கும் பூமியாகவும் திகழ்வதற்கான காரணத்தை ராமாயணகால நிகழ்வுகள் எடுத்துகாட்டுகின்றன.

இலங்கை வேந்தன் இராவணனால் சீதாபிராட்டி கவர்ந்து செல்லப்பட்ட நிலையில் ராமபிரானும் லட்சுமணனும் தேவியைத் தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே. அங்கு சென்றார்கள். அந்த சமயம் முனிவர் தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்தார். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் ராம-லட்சுமணர்களை வரவேற்று. முனிவர் யாத்திரை சென்ற விவரத்தைக் கூறினாள். தான் அங்கு முனிவருக்குப் பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவள் என்றும் சொன்னாள். அவளது தாழ்வு மனப்பான்மையைப் புரிந்துகொண்ட ராமபிரான் மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் இதில் உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்ற பாகுபடில்லை நீ கவலைப்படாதே நீ அளிக்கும் உணவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் இந்தக் காலகட்டத்தில் உன்னைத் தாழ்ந்தவள் என்று கூறும் மக்கள் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன். என்று சொல்லி, அவளின் பூரணசம்மத்துடன் அந்தப் பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம்பெற அருள்புரிந்தார். அதன் படி அருவியாய் மாறிய அந்தப் பெண்தான் பம்பா நதியாகப் பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்புப் பெயர் பெற்றாள்.

அந்தப் பெண் பம்பா நதியாக மாறியதும், அவளது மனம்குளிர அந்த நதியில் ராம லட்சுமணர்கள் நீராடினார்கள் அத்துடன் தன் தந்தைக்கு நீர்க்கடன் ஆற்றினார்கள். ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தவமிருந்து வழிபட்டனர். அவர்கள்முன் தேவி தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். தங்களின் விஸ்வரூப தரிசனத்தைக் காணவேண்டும். என்று கேட்க உடனே தேவி விஸ்வரூப தரிசனம் தந்தாள் தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தியை வைத்துக்கொண்டிருந்தான். அந்த சக்திதான் மகாசாஸ்தா. இதனைக் கண்ட சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஏக காலத்தில் இந்த மகாசக்தி தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்று ஆசைவந்து மனதிற்குள் அவர்கள் நினைத்ததைப் புரிந்துகொண்ட தேவி, அவர்கள் விருப்பம் நிறைவேற ஆசிபுரிந்தாள். தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்துவந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா. சாஸ்தாவின் அவதாரமென்பது பராசக்தியின் சங்கல்பம் என்கிறது புராணம்.

நதிக்கரையில் அவதரித்த அந்தக் குழந்தையை பந்தள மன்னன் கண்டெடுத்து வளர்த்தான். அந்த ஹரிஹரபுத்திரனால்தான் மகினின் சகோதரியான மகிஷி வதம் செய்யப்பட்டாள். இதனால் தேவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. அதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவபூமியானது. இந்த பம்பை நதிக்கரையில் மகரவிளக்குப் பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர். பெரிய இலைகளினால் தோணிபோல் செய்து, அதில் நெய்விளக்குகளேற்றி நதியில் மிதக்கவிடுவார்கள். மேலும் இந்த பம்பை நதிக்கரையில் விதவிதமான உணவு சமைத்து மானசீகமாக ஐயப்பனுக்குப் படைத்து பிரசாதமாக உண்பார்கள். இந்த விருந்தில் ஸ்ரீஐயப்பன் பங்கேற்கிறார் என்பது ஐதீகம்.

ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் வெகுகாலம் தவம் மேற்கொண்டு. அதன்  பலனாக ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களைக் கொடுத்து உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்பர். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்தால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது. மேன்மேலும் இந்த பம்பை நதி புனிதம் பெற தெய்வ நதிகளான கல்லாறு, கக்கட்டாறு ஆகிய நதிகளும் இதில் சங்கமமாகின்றன. எனவே இது திரிவேணி சங்கமத்திற்கு இணையாகிறது. இவ்வாறு ஏழு அம்சங்களிலும் சிறந்துவிளங்கும் சபரிமலையையும். அங்கு கோயில் கொண்டுள்ள ஐயப்ப சுவாமிகளையும் ஒழுக்கமாக விரதமிருந்து தரிசிப்பவர்கள் வாழ்வில் எல்லா நலங்களும் பெறுவர் என்பதில் ஐயமில்லை.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar