Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பகவானை வணங்கும் சத் பூஜை ... சோலைமலை முருகன் கோயில் திருக்கல்யாணம் சோலைமலை முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மழை: பம்பையில் வெள்ள அபாயம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மழை: பம்பையில் வெள்ள அபாயம்!

பதிவு செய்த நாள்

19 நவ
2015
10:11

சபரிமலை: சபரிமலையில் தொடர்ச்சியாக தினமும் மாலையில் கொட்டி தீர்க்கும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.  சபரிமலையில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  மலையேறி தரிசனம் நடத்தி வருகின்றனர்.கார்த்திகை முதல் நாள் மாலை ஆறு மணிக்கு மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக  பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து இரவு கொட்டி தீர்த்தது. மலையேறி களைப்பில் வந்த பக்தர்கள் தங்க இடம் இல்லாமல்  தவித்தனர். இந்நிலையில் நேற்றும் அதே நேரத்தில் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தங்கும் இடத்துக்காக அலைந்தனர். பொதுவாக  சபரிமலையில் திறந்த வெளியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவது வழக்கம். அது முடியாமல் போனதால் இரவு முழுவதும்  கட்டிடங்களில் ஓரங்களில் நின்று கொண்டிருந்தனர்.  மழை வரும் போது பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைக்க  வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர். பம்பையில் வெள்ள அபாயம்: சபரிமலையில் நேற்று இரவும் பலத்த மழை பெய்தது.  இதனால் பம்பையில் நீர் வரத்து அதிகரித்தது. பம்பை நதிக்கரையில் திருவேணியில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது வழக்கம்.  திடீர் என்று பெய்த பெருமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் இணைந்து  கார்களை கயிற்றால் கட்டி மரத்தில் கட்டினர். இதை தொடர்ந்து சன்னிதானத்தில் ஒலிபெருக்கி மூலம் திருவேணியில் பார்க்கிங் செய்த  பக்தர்கள் உடனடியாக பம்பைக்கு செல்லும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பக்தர்கள் குளிக்கவும் இரவு தடை விதிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar