கீழக்கரை: தட்டாந்தோப்பு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு காலை 9:30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடந்தன. பக்தர்கள் முருக நாம சங்கீர்த்தனம், பஜனைகள் பாடினர். தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், வருகிற நவ., 25 மாலை 6 மணிக்கு பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.