நெல்லை : நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயிலில் இன்று காலை 6 மணிக்கு ஆடிதபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஹரியும், சிவனும் ஒன்றே என உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆடிதபசு திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆடிதபசு விழா ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்ட் 07ம் தேதி நடைபெற உள்ளது.