சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு கருப்பசாமி கோவில் ஆடி அமாவாசை பெரு விழாவில் 5,008 பால்குட அபிஷேகம் நடந்தது.சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் கருப்பசாமி கோவில் 11ம் ஆண்டு ஆடி அமாவாசை பெரு விழா நடந்து வருகிறது.ஆடி அமாவாசையான நேற்று முன்தினம் பக்தர்கள் 5,008 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து கிடா பூஜையும் பின்னர் பதினெட்டாம் படிக்கான படி பூஜையும், மகா அபிஷேகமும் நடந்தது.நேற்று இரவு ஆடிஅமாவாசை சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடந்தது.பூஜைக்கான ஏற்பாடுகளை கருப்பசாமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.