ஹரிஹர புத்திர சாஸ்தா கோயிலில் நாளை மண்டல பூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2011 12:08
திருநெல்வேலி : என்ஜிஓஏ.,காலனி ஹரிஹர புத்திர சாஸ்தா கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா நாளை(3ம் தேதி) நடக்கிறது.என்ஜிஓஏ.,காலனி வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள பூர்ணா புஷ்கலா அம்பாள் சமேத ஹரிஹர புத்திர சாஸ்தாவிற்கு மண்டல பூஜை நிறைவு விழா நாளை(3ம் தேதி) நடக்கிறது. இதைமுன்னிட்டு காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 10 மணிக்கு 18 விதமான அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு களந்தை ஜெயராம் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை என்ஜிஓஏ.,காலனி ராமகிருஷ்ண குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் செய்தனர்.