அங்கமங்கலம் அன்னபூரணி கோயிலில் இன்று வளைகாப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2011 12:08
தூத்துக்குடி : அங்கமங்கலம் அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா கோயிலில் இன்று வளைகாப்பு விழா நடக்கிறது.திருச்செந்தூர் அருகே உள்ள அங்கமங்கலம் கிராமத்தில் நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன் மானிட ரூபத்தில் வீற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் நரசிம்மர் தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கும் ஒரே கோயில் இது ஒன்றுதான். சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக் கோயிலில் நரசிம்மர் சாந்தமான நரசிம்மராக தங்கை அன்ன பூரணியுடன் வீற்றிருப்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு புகழ் பெற்ற அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா கோயில் ஆடிப்பூர வளைகாப்பு விழா இன்று கோலாகலமாக நடக்கிறது. ஆடிப் பூரத்தை முன்னிட்டு அன்னபூரணி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் இன்று மாலை 5 மணிக்கு மேல் நடக்கிறது. பூஜை காரியங்களை மயிலாடுதுறை கிரிசர்மா நடத்துகிறார். வளைகாப்பு உற்சவத்திற்கான ஏற்பாடுகளை அன்னபூரணி சமேத நரசிம்மசாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.