திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பகசஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2015 11:12
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா இன்று துவங்குகிறது.சிவகங்கை மாவட்டத்திலுள்ள அஷ்ட பைரவர் கோயில்களில் முதன்மையானது திருத்தளிநாதர் கோயில் யோக பைரவர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடைபெறும். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் இன்று காலை 9 மணிக்கு அஷ்ட பைரவர் யாகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு பூர்ணாகுதி, பகல் 12 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.இதே போன்று மாலை 4.30 மணிக்கு யாகம் துவங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். டிச.16 வரை தினசரி காலை,மாலை இருவேளைகளிலும் யாகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.