பரமக்குடி பெருமாள் கோயிலில்"பகல் பத்து உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2015 10:12
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. மார்கழி மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து, ரா பத்து என 20 நாட்கள் தொடர்ந்து உற்சவம் நடக்கிறது. பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. தினமும் காலை பெருமாள் ஏகாதசி மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அர்ச்சகர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்ச்சியும், பக்தர்களின் பஜனையும் நடக்கிறது. பகல் பத்து உற்சவத்தின் 9வது நாளான 20ம் தேதி மாலை 5 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதியுலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதி சொர்க்கவாசல் திறக்கபடுகிறது. அதிகாலை 5 மணிக்கு சர்வ அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசலை கடந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசிக்கின்றனர். அன்று முதல் 30ம் தேதிவரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கிறது.