பதிவு செய்த நாள்
19
டிச
2015
02:12
ராமேஸ்வரம்: "ராமேஸ்வரம் கோயில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு ஜன., 15 முதல் பாம்பன் பாலம் நுழைவு வாயிலில் தொடர் வாகன சோதனை நடத்தப் படும், என, ராமநாதபுரம் எஸ்.பி., மணிவண்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20 ல் நடக்கிறது. கோயில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., முத்துராமலிங்கம், கோவில் கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் அண்ணாத்துரை, செல்லம் உடனிருந்தனர்.
எஸ்.பி., கூறியதாவது: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது. இதற்காக வெளி மாவட்ட போலீசார் உட்பட 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவர். ஜன., 15 முதல் பாம்பன் பாலம் நுழைவாயிலில் அனைத்து வாகனங் களும் சோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும். கோயில் மேல்தள பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும், என்றார்.