திருச்சி : திருச்சி : ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா அதிகாலை வெகு விமரிசையாக நடந்தது. ‘கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட, லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து பக்தி பரவசமடைந்தனர்.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 10ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் அதிகாலை நடைபெற்றது. ‘கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட, லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.