நடராஜர் கோவில் ஆரூத்ரா மகா தரிசனம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 06:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவத்தில் ஆனந்த நடனமாடி வந்த நடராஜரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொன்னம்பலத்தானே’; ஆடல் வள்லானே’ என கோஷம் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. (26ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம் துவங்கி 7:30 மணிக்கு முடிந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு திருவாபரண அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 2:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி புறப்பாடு மற்றும் சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. பஞ்சமூர்த்திகள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளியவுடன், மாலை 4:25 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் புறப்பாடு செய்து, சித்சபை பிரவேசத்திற்கு ஆனந்த தாண்டவ நடனமாடியவாறு பக்தர்களுக்கு ஆருத்ரா மகா தரிசனம் வழங்கி அருள்பாலித்தார். அப்போது பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் ஆடல் வள்ளாலே’; பொன்னம்பலத்தானே’ என விண்ணை முட்டும் கோஷங்கள் எழுப்பி நடராஜரை தரிசனம் செய்தனர். உற்சவ ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வரன் தலைமையில் கோவில் தீட்சிதர்கள் செய்தனர்.